×

முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது : காங்., அமைச்சர் நவ்ஜோத் ஜிங் பேச்சால் சர்ச்சை

பாட்னா : முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என கூறிய காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் ஜிங் சித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் ஜிங் சித்து காங்கிரஸ் கட்சியின் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாகவும் உள்ளார். தற்போது மக்களவை தேர்தலுக்காக தனது மாநிலத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பீகாரின் கத்தியார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் உள்ள பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.     

அப்போது முஸ்லிம்கள் உள்ள அந்த பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய சித்து, பாஜக உங்களை மதரீதியாக ஒடுக்குகிறது, இங்கு நீங்கள் 65 சதவீதம் பேர் இருப்பதால் நீங்களே பெரும்பாண்மை என்று கூறினார். நீங்கள் சேர்ந்து வாக்கு அளித்தால் மோடியை விரட்டலாம், எனவே பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என கூறினார். மதத்தை முன்னிறுத்தி சித்து இவ்வாறு பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியும், பாஜகவினரும் சித்துவின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சித்து மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123, 125 ஆகிய பிரிவின் கீழ், ஐபிசி பிரிவு 188ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Najjar Jing ,Muslims ,BJP , Muslims, BJP, Congress, Minister Navjot Jing
× RELATED கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை...